மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
9 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
9 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து யானை கற்சிலைகள், 2 பழைய கொடி மரங்கள் மாயமான சம்பவம் குறித்து கோயில் ஆவணங்களை தங்களிடம் தாக்கல் செய்யவும், செயல் அலுவலர் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கழித்து புகார் தெரிவிப்பது ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக செயல் அலுவலர் முத்துராஜா விளக்கமளிக்கவும் மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.இக்கோயிலில் கல்யாண மண்டப மணமேடை படிகளில் இரு புறமும் இருந்த 2 யானை சிலைகள் சட்ட விரோதமாக அகற்றப்பட்டது குறித்து விசாரிக்கவும், ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னதிகள் இருந்த கொடி மரங்கள் கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு புதிதாக மூன்று கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.இதில் கோயிலில் இருந்த இரண்டு பழைய கொடி மரங்கள் சட்ட விரோதமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோயில் செயல் அலுவலர் முத்துராஜா மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்திருந்தார்.இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயிலில் நேரடியாக ஆய்வு செய்தனர். மேலும் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா, பட்டர்கள் மூவர், கோயில் ஊழியர்கள் இருவர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் சிலைகள், கொடி மரங்கள் மாயமான சம்பவத்தில் கோயில் ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்கவும், சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், செயல் அலுவலராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆன பிறகு தற்போது புகார் கொடுப்பது ஏன் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக செயல் அலுவலர் முத்துராஜா விளக்கமளிக்கவும் மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago