உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் டிப்போவில் தேங்கிய மழைநீர்: ஊழியர்கள் அவதி

பஸ் டிப்போவில் தேங்கிய மழைநீர்: ஊழியர்கள் அவதி

வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு அரசு பஸ் டிப்போவில் தேங்கிய மழை நீரால் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.வத்திராயிருப்பு அரசு பஸ் டிப்போவில் 10 டவுன் பஸ்கள், 6 ரூட் பஸ்களும் உள்ளன. டிப்போ நுழைவாயிலில் இருந்து பஸ்கள் பழுது பார்க்கும் செட் வரை பள்ளமாகவும், மண் தரையாகவும் இருப்பதால் லேசான மழை பெய்தாலே சகதி ஏற்பட்டு நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.கடந்த இரண்டு மாதமாக பெய்த மழையினால் பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் ஆகியது. நேற்றும் வேலைக்கு வந்த ஊழியர்கள் தேங்கிய தண்ணீரில் நடந்து சென்றனர்.ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இத்தகைய அவல நிலை ஏற்படுவதால் சிமென்ட் தளம் அமைக்க போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிரைவர், கண்டக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை