உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வளர்த்த ஆடு இறந்ததால் மாணவர் தற்கொலை

 வளர்த்த ஆடு இறந்ததால் மாணவர் தற்கொலை

நரிக்குடி: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மைலி இலுப்பகுளத்தில் செல்லமாக வளர்த்த ஆடு இறந்ததால் விரக்தியில் மாணவர் செந்தில்குமார் 18, தற்கொலை செய்து கொண்டார். இவ்வூரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் செந்தில்குமார். திருச்சுழி கேத்தநாயக்கன்பட்டி அரசு ஐ.டி.ஐ., மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். இவருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை சேமித்து செம்மறி கிடாய் குட்டி வாங்கினார். கடந்த ஆறு மாதங்களாக அதை செல்லமாக வளர்த்தார். சமீபத்தில் பெய்த கனமழைக்கு அக் குட்டி நோய் வாய்ப்பட்டு இறந்தது. இதனால் விரக்தி அடைந்த செந்தில்குமார் டிச., 1 ல் விஷம் குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ