உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவருக்கு கண்ணில் காயம்

 ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவருக்கு கண்ணில் காயம்

விருதுநகர்: மாணவரை பிரம்பால் அடித்தபோது, அருகிலிருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பட்டு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை, வகுப்பறையில் நவ., 17ல் சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பிரம்பால் அடித்தார். அப்போது, அருகே அமர்ந்திருந்த மாணவரின் இடது கண்ணில் பிரம்படி பலமாக விழுந்ததால், கருவிழியில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக காயமடைந்த மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, மதுரை தனியார் கண் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நவ., 18ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விருதுநகர் மேற்கு போலீசார் ஆசிரியர் குமார் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ