box பிளக்ஸ் வைத்த மாணவர் பலி
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே இனாம் கரிசல் குளத்தை சேர்ந்த காளியப்பன் மகன் காளீஸ்வரன். இவர் பி.எஸ்.சி. விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்தார். மதுரையில் இன்று நடக்கும் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்காக, நேற்று முன்தினம் இரவு 9:50 மணிக்கு காமராஜர் நகரில் பிளக்ஸ் வைக்க இரும்பு குழாய் எடுக்கும்போது டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், காளீஸ்வரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.