உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு

கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு

விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழும், பல்துறை பணிவாய்ப்பும் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கு நடந்தது.தமிழ் உயராய்வு மைய தலைவர் வேல்மயில் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மீனாராணி தலைமை வகித்தார். நியூ புக் செஞ்சுரி நிறுவன மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் மாரிமுத்து, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழாய்வு மைய தலைவர் சிவனேசன் ஆசிரியர் பணி வாய்ப்பு குறித்தும், தினமலர் செய்தி ஆசிரியர் ரமேஷ்குமார் ஊடகப்பணி வாய்ப்பு பற்றியும், திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பார்த்திபராஜா கலை, நாடகம், திரைத்துறை சார்ந்து பேசினர்.நிறைவு விழாவில் இணைப்பேராசிரியர் விந்தியகவுரி வரவேற்றார்.கல்லுாரி கூட்டு செயலாளர் லதா, கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு, மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார். முதுகலை தமிழ்த்துறை தலைவர் நாகஜோதி நன்றிகூறினார். 8 கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ