| ADDED : பிப் 18, 2024 12:38 AM
சிவகாசி: சிவகாசி ஒய்.ஆர்.டி.வி.,டென்னிஸ் அகாடமி சார்பில் தென் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி நடந்தது.இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா , கார்நாடகா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஓபன்,45, 55 வயது பிரிவுகளில் போட்டி நடந்தது.பயோனியர் குழுமத்தின் இயக்குனர் மகேஸ்வரன் போட்டியை துவங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு தொழிலதிபர் அதிரூபன் பரிசு வழங்கினார். அகாடமி இயக்குனர் சிரஞ்சீவி ராஜரத்தினம், மாவட்ட டென்னிஸ் விளையாட்டு கழக தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டனர். தலைமை பயிற்சியால் சிவகுமார் நன்றி கூறினார்.