உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தை அமாவாசை குண்டாற்றில் தர்ப்பணம்

தை அமாவாசை குண்டாற்றில் தர்ப்பணம்

திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.திருச்சுழி காசி, ராமேஸ்வரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு ஈடானது. 14 பாண்டிய ஸ்தலங்களில் பத்தாவது ஸ்தலமாக திருச்சுழி உள்ளது. இதனால், ஒவ்வொரு மாதம் அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் ,வெளியூர்களில் இருந்து மக்கள் திருச்சுழி குண்டாற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.நேற்று தை அமாவாசையை முன்னிட்டு குண்டாற்றில் காலை 6:00 மணியிலிருந்து மக்கள் குண்டாற்றில் தர்ப்பணம் , திதி கொடுத்தனர். பின்னர் திருமேனிநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து மோட்ச தீபம் ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை