உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். எளிதில் தீப்பற்றும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்தனர்.பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் கூடுதலாக ஒரு மணி நேரம் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.கோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு பூஜாரிகள் அமாவாசை வழிபாடு பூஜைகளை செய்தனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வத்திராயிருப்பு சாப்டூர் போலீசார் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை