உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்

செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்

சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி தேர் நிலை மண்டப சுவர்களில் செடிகள் முளைத்து சுவர் பலமிழந்து வருவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். சாத்துாரப்பன் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையானது. ஆனி மாதம் இக்கோயில் தேரோட்டம் நடக்கும். ஜமீன்தார்கள் காலத்தில் இந்த கோயில் , தேர் நிலை மண்டபம் கட்டப்பட்டது. .தற்போது தேர்நிலை மண்டபத்தில் செடிகள் முளைத்ததோடு, சுவர் பலம் இழந்து வருகின்றன.மேலும் கடந்த முறை தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தடி சக்கரத்துடன் இருக்கும் குரங்கு கட்டைகள் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்த படி வெளியில் கிடைக்கிறது.தேர் நிலை மண்டபத்தில் தேருக்கு தேவையான உபகரணங்கள் வைக்கும் அறை உள்ளது. இதன் கதவுகளும் சுற்றுச்சுவர்களும் தற்போது பலம் இழந்த நிலையில் சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். கோயில் நிர்வாகம் தேர் நிலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவோதோடு சுவரையும் செப்பனிட வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி