உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தேவதானம் கோயில் காவலாளிகள் கொலையில் தலைமறைவானவர் சதுரகிரியில் பதுங்கலா

 தேவதானம் கோயில் காவலாளிகள் கொலையில் தலைமறைவானவர் சதுரகிரியில் பதுங்கலா

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் காவலாளிகள் பேச்சிமுத்து 50, சங்கர பாண்டியன் 65, ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான முனியசாமி சதுரகிரி மலையில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தனிப்படையினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். இக்கோயிலில் நவ., 10 இரவு நேர காவல் பணியில் இருந்த பேச்சிமுத்து, சங்கர பாண்டியனை கொலை செய்து உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதில் ஈடுபட்ட அதை ஊரைச் சேர்ந்த நாகராஜ் 25, என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். முனியசாமி என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான முனியசாமி நேற்று முன்தினம் மாமியார் ஊரான கோட்டையூருக்கு வந்து சென்றதை கண்டறிந்த தனிப்படையினர் அங்கு செல்வதற்குள் தப்பி விட்டார். அவர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலை, மாவூற்று உதயகிரிநாதர் கோயில் மலைப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதையடுத்து தனிப்படை போலீசார் மட்டுமின்றி நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் நேற்று மலையில் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முனியசாமி சரணடையலாம் என்ற தகவல் வெளியானதன் எதிரொலியாக கூடுதல் போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப் பட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை