உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் சிக்கல்

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் சிக்கல்

ராஜபாளையம், : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தால் விவசாய பணிக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விலை நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றி வரும் போக்கு அதிகரித்துள்ளது. நீர் ஆதாரம் அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வந்தது.ஆற்று நீரை கண்மாய்களில் தேக்கி நீர் ஆதாரங்களால் அதற்கான பருவங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சேத்துார், தேவதானம், வத்திராயிருப்பு போன்ற விதிகளில் நெல் விவசாயம், கரும்பு, வாழை பயிர்களும் அதனை அடுத்த பகுதிகளில் தென்னை, மா தோப்புகள் கொய்யா, சப்போட்டா போன்ற பழமரங்கள் பல்வேறு காய்கறிகள், கீரைகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடந்து வந்தது.சாமீப காலமாக விதைகள், உரத் தட்டுப்பாடு, கால்நடைகள் வளர்ப்பு குறைவு, இளைய தலைமுறையின் ஆர்வமின்மை, விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காதது போன்றவற்றால் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது.இதை ஈடு செய்ய அரசுகள் மானிய விதை, உரம், கூலி தொழிலாளர் பற்றாக்குறைக்கு நவீன தொழில்நுட்பம், சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் என வழங்கினாலும் கூலி ஆட்கள் பற்றாக்குறை தொடர் பிரச்சனையாகவே உள்ளது.இச்சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு பெரும்பாலானோர் சென்று விட்டதால் விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.இவற்றை சமாளிக்க கூலி அதிகம் கொடுத்தும் குறிப்பிட்ட அறுவடை போன்ற காலங்களில் ஆட்கள் கிடைக்காமல் விவசாயத்தை கைவிட்டு ரியல் எஸ்டேட்களாக மாற்றும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.இதற்கு மாற்றாக கேரள மாநிலத்தில் உள்ளது போல் அரசும் விவசாய கூலி ஆட்கள் தேவைப்படுவோர் இணைந்து பணியாட்களை பிரித்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கான நிரந்தர வேலை கிடைப்பதுடன் கூலியாட்களுக்கும் பற்றாக்குறை பிரச்சனை சரி செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் உரிய பரிந்துரை வழங்கி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ