உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிவேகத்தில் வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து நாச்சியார்பட்டி மக்கள் அச்சம்

அதிவேகத்தில் வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து நாச்சியார்பட்டி மக்கள் அச்சம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் பட்டியில் எம்.சாண்ட் ஏற்றி அதிவேகத்தில் வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.நாச்சியார்பட்டி பகுதியில் உள்ள கிரஷரில் இருந்து தினமும் டிராக்டர்கள் மூலம் எம்சாண்ட் கொண்டு செல்லப்படுகிறது. இதில் அதிவேகத்தில் வரும் டிராக்டர்களால் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர்.நேற்று மாலை 5:00 மணிக்கு எம்சாண்ட் ஏற்றிக்கொண்டு, நாச்சியார் பட்டி பஸ் ஸ்டாப் அருகில் அசுர வேகத்தில் வந்த டிராக்டர் கவிழ்ந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. டிராக்டர் டிரைவர் உயிர் தப்பினார்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;எம் சாண்ட் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் செல்கிறது. இதனால் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை