| ADDED : பிப் 24, 2024 05:51 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைபாண்டியன், 40, இவர் குற்றச் செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய ஜெயிலில் இருந்தார். அங்கு இவருக்கு திருப்பூர் கோல்டன் நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ்,22, பழக்கமானார். பிப்.,9ல், பிச்சை பாண்டியனை பார்க்க பிரகாஷ்ராஜ் வந்துள்ளார். தனது நண்பனிடம் எனக்கு அப்பா, அம்மா, உறவினர்கள் யாரும் இல்லை எனவும், தான் காதலித்த வந்த பெண்ணும் தன்னை விட்டு சென்று விட்டதாகவும் பிரகாஷ்ராஜ் புலம்பியுள்ளார். இந்நிலையில், பிப்., 15 காலை 8:00 மணிக்கு வீட்டுக்கு வெளியே சென்ற பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு வந்து தனது நண்பரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அவர் விருதுநகர் அரசு மருத்துவமைனயில் இறந்தார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.