உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம்

பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம்

சத்திரப்பட்டி: ராஜபாளையம் அருகே நரிக்குளத்தில் ரூ.5.25 லட்சத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், பயன்பாட்டிற்கு வராததால் திறந்த வெளியை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம் அருகே வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட நரி குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 5.25 லட்சம் மதிப்பில் ஆண் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.5.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் கடந்தும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வராததால் கண்மாய் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன் இப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற கட்டட தொழிலாளி காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்ததார். ஏற்கனவே பலமுறை முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க திறந்த வெளிக்கு செல்வோர் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து மாரிமுத்து: கட்டி முடித்தும் பொது சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் கண்மாய் மற்றும் புதர் பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இயற்கை உபாதைக்கு சென்ற கட்டட தொழிலாளியை காட்டுப்பன்றி தாக்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ