மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
10 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
10 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
10 hour(s) ago
விருதுநகர்: குல்லுார்சந்தை அணைக்கு விருதுநகரில் இருந்தும், மெட்டுக்குண்டுவில் இருந்தும் செல்லும் ரோடுகள் குண்டு குழி பள்ளங்களாலும், மண் அரிப்பு ஏற்பட்டும் மோசமான நிலையில் உள்ளன.விருதுநகரின் முக்கிய நீர்நிலையாக குல்லுார்சந்தை அணை உள்ளது. இந்த அணை கவுசிகா நதியின் நீர்வரத்தால் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., அணையை கட்டிய காலத்தில் பூங்கா நிறுவப்பட்டது.ஆனால் தற்போது அணையின் பூங்காவின் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் துருபிடித்து சிதிலமடைந்து விட்டன. தற்போது அணையை உயிர் பன்மை தலமாக இயற்கை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சுற்றி காட்ட மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால் குல்லுார்சந்தை அணைக்கு விருதுநகரில் இருந்தும், மெட்டுக்குண்டு வழியாகவும் வரும் ரோடுகள் மோசமான நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகம் எதிரே கூரைக்குண்டு ரோட்டில் துவங்கும் பாதை மாத்தநாயக்கன்பட்டி வழியாக செல்கிறது. இப்பகுதியில் உள்ள ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தார் அனைத்தும் பெயர்ந்து விட்டதால் பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.இதே போல் அருப்புக்கோட்டை பாலவநத்தம் மெட்டுக்குண்டு வழியாக குல்லுார்சந்தை வரும் வழியில் டிச. 18ல் பெய்த கனமழையால் வரத்து ஓடைகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள ரோடுகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயமும் அதிகம் உள்ளது.குல்லுார் சந்தை அணையை உயிர் பன்மை தலமாக வன ஆர்வ மாணவர்களுக்கு சுற்றி காட்டும் முன் ரோடு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குல்லுார்சந்தை அணைக்கு முன்பு உள்ள தரைப்பாலம் இந்தாண்டு பெய்த கனமழையில் சேதமடைந்துள்ளது. பொதுப்பணித்துறை நிர்வாகம் அதையும் சரி செய்ய வேண்டும்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago