உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வாரம் இருமுறை நடந்த ஏற்பாடு

 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வாரம் இருமுறை நடந்த ஏற்பாடு

விருதுநகர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை விடுபட்ட சுகாதார வட்டார அலகுகளில் தேர்தல் அறிவிப்புக்கு முன் முடிக்க வாரத்திற்கு இருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் தாலுகா வாரியாக மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதில் பல்வேறு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதால் மக்கள் பலரும் வந்து பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவற்றில் ஒவ்வொரு சுகாதார வட்டார அலகிற்கும் தலா 15 முகாம்கள் என திட்டமிடப்பட்டு தேர்தலுக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல மாவட்டங்களில் குறிப்பிட்டபடி இது நடத்தி முடிக்கப்படவில்லை. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களை விரைந்து நடத்தி முடிக்கவும், அதன் இறுதி கட்ட தகவல்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் எதுவாக விடுபட்டுள்ள இடங்களில் வாரத்திற்கு இருமுறை நடத்தவும் அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை