செங்கமல நாச்சியார்புரத்தில் தெருவிளக்குகள் இல்லை குடியிருப்போர் அவதி
சிவகாசி : சிவகாசி அருகே கங்காகுளத்தில் இருந்து செங்கமலநாச்சியார்புரம் வரை தெருவிளக்குகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே கங்காகுளத்தில் இருந்து செங்கமல நாச்சியாபுரம் ஒரு கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது. இங்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி இருளில் மூழ்கி கிடப்பதால் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால் இந்த ரோடு முக்கிய மாற்று பாதையாக உள்ளது. டூவீலரில், சைக்கிளில் வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி ஸ்டேட் பேங்க் காலனி 5 வது தெருவில் இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. உட்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு சேதம் அடைந்திருப்பதால் கீழே விழுந்து சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியிலும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.