அரசு ஸ்பேர் பஸ்களின் இயக்கத்தில் கண்காணிப்பு இல்லை
விருதுநகர்; அரசு ஸ்பேர் பஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் போதிய கண்காணிப்பு இல்லாததால் அறிவிக்கப்பட்ட நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது அடிக்கடி நடக்கிறது. இதனால் காத்திருக்கும் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் விரைவு, பைபாஸ் ரைடர்கள், நகர், புறநகர் பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் ஸ்பேர் பஸ்கள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. பஸ்களில் பழுது ஏற்பட்டு வழித்தடங்களில் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது ஸ்பேர் பஸ்கள் இயக்கப்படுகிறது.ஆனால் ஸ்பேர் பஸ்கள் இயக்கப்படும் போது மட்டும் அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் நின்று செல்லாமல் முக்கியமான நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வது அடிக்கடி நடக்கிறது. மற்ற நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணிகளிடம் நிற்காது என நடத்துனர் தெரிவிப்பதால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளாகின்றனர்.ஸ்பேர் பஸ்கள் இயக்கப்படும் போது அறிவிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்கிறதா என்பதை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. இது போன்ற தவறுகள் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டபட்டாலும் போதிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.அரசு போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு வழித்தடத்தில் ஸ்பேர் பஸ்கள் என்றாவது ஒரு நாள்மட்டும்இயக்கப்படுகிறது. இதில் நகர், புறநகர் பஸ்கள் அறிவிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. ஆனால்மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் ஒரு சில ஸ்பேர்பஸ்களில்மட்டும் டிரைவர், நடத்துனர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கைஎடுக்கப்படுகிறது, என்றார்.