உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளப் பிரிவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளப் பிரிவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 50 கண்மாய்கள் உள்ளன. நீர்வளப் பிரிவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. தப்பித்தவறி அதிக மழை பெய்தால் கூட அனைத்து கண்மாய்களிலும் நீர் நிரம்புவதில்லை. நிறைந்தாலும் ஒரு சில மணி நேரங்களில் வெளியேறி விடுகிறது. கண்மாய்களைச் சுற்றி மரங்களை நட்டு கரைகளை பலப்படுத்துவது இல்லை. கரைகளில் மண் சுரண்டப்பட்டும், மரங்கள் இல்லாததால் கரைகளின் உறுதித் தன்மை குலைந்து மழைக்காலத்தில் மழை நீர் வரும்போது உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அருப்புக்கோட்டையை சுற்றி 476 கண்மாய்கள் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. பல ஆண்டுகளாக கண்மாய்களை முறையாக பராமரிக்காததால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் போகிறது. கண்மாய் கரைகளில் மரங்கள் நடப்பட்டால் மண்வளமும், நீர் வளமும் பெருகும். மண் அரிப்பை தடுக்கும் ஆற்றல் மரங்களுக்கு உள்ளது. ரோடுகளின் ஓரங்களில் மரங்களை நட்டு வைக்க முடியாவிட்டாலும் கண்மாய் கரை பகுதியில் மரங்களை அவசியம் நட வேண்டும். மண் அரிப்பை தடுப்பதுடன் பறவை இனங்களுக்கும் மரங்கள் புகலிடமாக விளங்குகின்றன.அருப்புக்கோட்டையை சுற்றி 22 கண்மாய்கள் உள்ளன. இவற்றில் பெரிய கண்மாயின் ஒரு பகுதியில் மட்டும் தான் மரங்கள் உள்ளன. அருப்புக்கோட்டை பாலையம்பட்டி அருகே உள்ள 7 கண்மாய்களில் கரைகளில் மரங்கள் எதுவும் நடப்படவில்லை. புளியம்பட்டியில் உள்ள செவல் கண்மாய் கரைகளில் மரங்கள் இல்லை. பயனுள்ள கரைகளை பாதுகாக்க உதவும் மரங்கள் வளர்க்கப்படாததால் பெரும்பாலான கண்மாய்களில் சீமை கருவேல மரங்கள் தான் முளைத்துள்ளன. மாவட்டத்திலுள்ள கண்மாய்களின் கரைகளை பலப்படுத்த தேவையான மரங்களை நட்டு நீர்நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை