மேலும் செய்திகள்
பாரதி தீர்த்த மகா சுவாமிகள் 75வது ஜெயந்தி விழா
30-Mar-2025
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அக்ரஹாரம் நடுத்தெருவில் அமைந்துள்ள ராமமூர்த்தி சுவாமி பஜனை மடத்தில்தட்சிணாம்நாய ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிக்கு 75வது திருநட்சத்திர மகோத்ஸவம் நடந்தது. கணபதி பூஜை, ருத்ர பாராயணம், ஆவஹந்தி ஹோமம், மிருத்திஞ்சய ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு உலக நன்மை கருதி வழிபாடு செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி மடம் முத்ரா திகாரி ஆர் சங்கர நாராயணன், சிஷ்யர்கள் செய்தனர்.
30-Mar-2025