உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி

ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி

திருச்சுழி: திருச்சுழி ஊராட்சி ஒன்றிய கிராமங்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டத்தை முன்னேற விளையும் மாவட்டமாக மத்திய அரசு அறிவித்து பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் முன்னேற விளையும் ஒன்றியமாக திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், கிராம குழுக்களை வலுப்படுத்துதல் உட்பட பயிற்சிகள் நடந்தது. பயிற்சிகளை பிரம்மால் பவுண்டேஷன் அமைப்பினர் வழங்கினர். இதற்கு ஒன்றிய குழு தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்.பி.டி.ஓ., க்கள் காஜா மைதீன் பந்தே நவாஸ், பத்மினி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். திட்ட மேலாளர் காந்தி , பயிற்றுநர்கள் இடைநிற்றல் இல்லாத ஊராட்சியாக மாற்றுவது, கிராம குழுக்களை தயார் செய்வது போன்றவற்றை விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை