மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
அருப்புக்கோட்டை: அரசு பஸ்கள் முறையான பராமரிப்பு இன்றி, தடதடவென இயங்குவதால், பயணிகள் பீதியுடன் பயணிக்கின்றனர்.அருப்புக்கோட்டை அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அருப்புக்கோட்டை -மதுரை அருப்புக்கோட்டை - விருதுநகர், ராஜபாளையம், ராமநாதபுரம், ராமேஸ்வரம் உட்பட தொலைதூர ஊர்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நகரில் இயங்கும் பெரும்பாலான பஸ்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. எஞ்சின் சப்தத்தை விட, பஸ்களின் பிற பாகங்களால் ஏற்படும் சத்தம் அதிகமாக உள்ளது.விருதுநகரிலிருந்து பார்த்திபனூர் செல்லும் அரசு பஸ்சில் டிரைவர் பக்கம் உள்ள பஸ்சின் வெளிப்பகுதியில், தகடு பெயர்ந்து விழும் நிலையில் தடதடவென ஆடிக் கொண்டே உள்ளது. இந்தப் பகுதியில் உட்கார்ந்து செல்லும் பயணிகள் பயத்துடனே தான் பயணிக்க வேண்டி உள்ளது. பல டவுன் பஸ்களில் பம்பர் கழன்றும், பயணிகள் இருக்கை அருகில் உள்ள ஜன்னல் கதவு திறக்க முடியாமலும் உள்ளது. சீட்டுகளும் ஆடிக் கொண்டே தான் உள்ளன. தொலை தூரம் பயணிக்கும் அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க சமபந்தப்பட்ட டெப்போ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
13 hour(s) ago
13 hour(s) ago