/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் பதிக்க நடைபாதை பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் மாற்றுத்திறனாளிகள் அவதி
குழாய் பதிக்க நடைபாதை பெயர்த்தெடுப்பு சீரமைக்காததால் மாற்றுத்திறனாளிகள் அவதி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விவசாயத்துறை, ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றிற்குச் செல்லும் ரோடு சேதம் அடைந்து இருந்ததால், சில மாதங்களுக்கு முன்பு அலுவலகம் செல்லும் பாதை தார் ரோடு, ஓரப்பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. 20 நாட்களுக்கு முன்பு, ரோடு ஓரங்களில் இருந்த பேவர் பிளாக் கற்களை பெயர்த்து எடுத்து தாமிரபரணி குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்தது. பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் பழையபடி பேவர் பிளாக் கற்களை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். குடிநீர் வடிகால் வாரியத்தினர் பேவர் பிளாக் கற்களை பதித்து ரோட்டை சீரமைக்க வேண்டும்.