உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்

இருக்கன்குடியில் நிழற்குடை கட்ட பயணிகள் விருப்பம்

சாத்துார்: சாத்துார் அருகே இருக்கன்குடியில் பயணிகள் நிழற்குடை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இருக்கன்குடியில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.செவ்வாய் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.சாத்துார் நென்மேனி ரோட்டில் அமைந்துள்ள இருக்கன்குடிக்கு வெளியூரில் இருந்து வரும் பயணிகள் ரோட்டின் ஓரத்திலேயே இறக்கிவிடப்படுகின்றனர்.நீண்ட துாரத்தில் இருந்து பயணம் செய்து வரும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கியதும் சிறிது நேரம் இளைப்பாற பயணிகள் நிழற்குடை வசதி இல்லை.பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் கோயிலை நோக்கி நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. வயதான முதியவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தற்போது மழைக்காலமாக உள்ளது. வெளியூரிலிருந்து வரும் பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உடமைகளை நனையாமல் பார்த்துக் கொள்ள மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே வெளியூர் பக்தர்கள் நலன் கருதி இருக்கன்குடியில் போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை