உள்ளூர் செய்திகள்

சிலை வைக்க முயற்சி

சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சல்வார் பட்டியில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அப்பகுதியினர் அனுமதி பெறாமல் முத்துராமலிங்க தேவர் சிலையை நிறுவ முயன்றனர். இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், வருவாய் துறை அதிகாரிகள் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதிமன்ற தடை இருப்பதால் சிலையை நிறுவக்கூடாது என்று எடுத்துக் கூறியதை தொடர்ந்து வருவாய்த்துறையினரிடம் சிலையை ஒப்படைத்தனர். நீதிமன்ற அனுமதி பெற்று வந்த பின்னர் சிலை மக்களிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ