மேலும் செய்திகள்
கட்டிக்குளத்தில் கலங்கல் நீர் சப்ளை
02-Nov-2025
ராஜபாளையம்: ராஜபாளையம்அருகே கடந்த ஒரு மாதமாக கலங்கலான குடிநீர் உபயோகிப்பதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். ராஜபாளையம் மேலப் பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்காக ஆதுரி கண்மாயில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளையாகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த கன மழைக்கு பின் சப்ளை ஆகும் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை. இங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் சுத்தப்படுத்துவதில்லை. சுத்தம் செய்த நாள் குறித்து தகவல் பலகையில் எழுதுவதில்லை. குடிநீர் தொடர்ந்து கலங்கலாக வருவதால் குடங்களை தூக்கி மற்ற பகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர்.
02-Nov-2025