உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசியில் பெண் போலீஸ் வீட்டின் சுவர் இடிந்து இரு சிறுமிகள் பலி

 சிவகாசியில் பெண் போலீஸ் வீட்டின் சுவர் இடிந்து இரு சிறுமிகள் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் பெண் போலீஸ் ராஜேஸ்வரியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது மகள் கமலிகா 9, சகோதரி மகள் ரிஷிகா 4, பலியாகினர். கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. கணவர் ராஜாமணி. ராஜேஸ்வரி சிவகாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகன் கவின் 11, மகள் கமலிகா. அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ராஜேஸ்வரியின் சகோதரி சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி தனது மகன் நிஷாந்த் 6, மகள் ரிஷிகாவுடன் கொங்கலாபுரம் வந்திருந்தனர். நேற்று காலை 8:00 மணி அளவில் ராஜேஸ்வரியின் வீட்டின் முன்பாக உள்ள இரும்பு கேட்டில் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடினர். அப்போது கேட்டுடன் சுவர் சரிந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் பலத்த காயமடைந்தனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இரு சிறுமிகளும் உயிரிழந்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த வீடு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது. ராஜேஸ்வரி நேற்று காலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார். அணிவகுப்பு முடிந்து டீ குடித்துக் கொண்டிருந்தபோது சிறுமிகள் காயமடைந்த தகவல் வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி