உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  சிவகாசியில் ரூ.500 கள்ள நோட்டு பெண் உட்பட இருவர் கைது

 சிவகாசியில் ரூ.500 கள்ள நோட்டு பெண் உட்பட இருவர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம்சாத்துார் அருகே நீராவிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்த லட்சுமி 50. சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே காய்கறி கடை வைத்துள்ளார். நேற்று காலை 11:30 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவரது கடையில் ரூ. 350க்கு காய்கறி வாங்கிவிட்டு ரூ. 500 கொடுத்தார். மீதம் பணம் வாங்கிக்கொண்டு அவர் சென்றுவிட்டார். ஆனந்தலட்சுமி அந்த பணத்தை மற்றொருவருக்கு கொடுத்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரிந்தது. அருகில் கடை வைத்திருக்கும் முத்துலட்சுமியிடம் கூறிய போது அங்கும் அதே பெண்மணி ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து பொருட்கள் வாங்கிச் சென்றது தெரிய வந்தது. அதே பெண்மணி மீண்டும் மாலை 6:00 மணியளவில் ஆனந்த லட்சுமி கடைக்கு காய்கறி வாங்க வந்தார். சுதாரித்த அவர் உடனடியாக அருகில் உள்ளவர்களிடம் தகவல் கூறி பிடித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் கள்ளநோட்டு கொடுத்தவர் சிவகாசி புதுத்தேர்வை சேர்ந்த முருகன் மனைவி நந்தினி 39, என்பது தெரிய வந்தது. அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரவி 58, கள்ள நோட்டுகளை கொடுத்து புழக்கத்தில் விட சொன்னது தெரிந்தது. இருவரிடமிருந்து ரூ. 500 கள்ள நோட்டுகள் 46 பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து கள்ள நோட்டுகள், இரு அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ