உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிகரிக்கும் டூவீலர் விபத்துக்கள்

 ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிகரிக்கும் டூவீலர் விபத்துக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி, வத்திராயிருப்பு, சத்திரப்பட்டி செல்லும் ரோடுகளில் டூவீலர் விபத்துகள் அதி கரித்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்துார் சட்ட சபை தொகுதியில் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான அரசு, தனியார் தொழிலாளர்கள், பட்டாசு, பஞ்சாலை ஊழியர்கள் தினமும் சிவகாசி, சத்திரப்பட்டி, ராஜபாளையத்திற்கு டூவீலரில் சென்று வரு கின்றனர். மேலும் ஏராளமான கல்லுாரி மாணவர்கள் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு, வன்னியம்பட்டியில் இருந்து சத்திரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து சிவாகாசி செல்லும் ரோட்டிலும் தினமும் காலை, மாலை வேலை நேரங்களில் அதிகளவில் டூவீலரில் பயணித்து வருகின்றனர். இதில் ஒன்றுக்கொன்று ஓவர்டேக் செய்யும் போது எதிரே வரும் வாகனங்களில் மோதி காயமடைகின்றனர்.இதனால் நகரின் அனைத்து வழித்தடங்களிலும் தினமும் ஒரு டூவீலர் விபத்தாவது ஏற்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த வழித் தடங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை