வாசகர்கள் கருத்துகள் ( 2 )
99% விபத்துகளுக்கு இப்படிப்பட்ட லாரி டிரைவர்கள் தான் காரணம்
கதி சக்தி. ஜிந்தா பாத்.
மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை...
21-Jan-2025
விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பூசாரிப்பட்டி விலக்கில் நின்றிருந்த லாரியின் பின்னால் டூவீலர், லோடு வேன் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் பலியினர்.விருதுநகர் அல்லம்பட்டி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம் 36. சாத்துார் தாயில்பட்டியில் பட்டாசு ஆலையில் பணிபுரிகிறார். இவர் சாத்துாரிலிருந்து டூவீலரில் விருதுநகர் நோக்கி நான்கு வழிச்சாலையில் நேற்று அதிகாலை 12:00 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிமின்ட் ஏற்றி மதுரை நோக்கி வந்த லாரியை கள்ளிக்குடி அரசப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் ஓட்டி வந்தார். பூசாரிப்பட்டி விலக்கில் லாரி பழுதாகி நின்றது. லாரியின் பின்னால் தடுப்பு சிக்னல் எதுவும் வைக்காமல் ரோட்டில் டிரைவர் நிறுத்தி வைத்திருந்தார்.டூவீலர் ஓட்டி வந்த செல்வம் லாரியின் பின்னால் மோதி சம்பவயிடத்திலேயே பலியானார். அவ்வழியாக லோடு வேன் ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் பழையகோட்டையைச் சேர்ந்த வினோத் 36, வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு விபத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது மதுரை நோக்கி கோவில்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் கார்த்திக், உடன் வந்த பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த பழக்கடை வியாபாரி வேல்முருகன் 43, வந்த லோடு வேன், லாரியின் பின்னாலும், வினோத் மீதும் மோதியதில் வினோத், வேல்முருகன் சம்பவயிடத்திலேயே பலியாகினர்.காயமடைந்த ரமேஷ் கார்த்திக் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் லாரி டிரைவர் ஈஸ்வரன், லோடு வேன் டிரைவர் ரமேஷ் கார்த்திக் மீது வழக்கு பதிந்தனர்.
99% விபத்துகளுக்கு இப்படிப்பட்ட லாரி டிரைவர்கள் தான் காரணம்
கதி சக்தி. ஜிந்தா பாத்.
21-Jan-2025