உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அனுமதியின்றி திருச்சலுார் கண்மாய்-- நீர் திறப்பு

 அனுமதியின்றி திருச்சலுார் கண்மாய்-- நீர் திறப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் திருச்சலுார் கண்மாய் முறையான அனுமதி இன்றி திறக்கப்பட்டதால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வெளியேறுவதுடன் பயிர்கள் மூழ்கி சேதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ராஜபாளையம் தென்காசி ரோட்டில் கடம்பன் குளம் கண்மாய் அடுத்து திருச்சலுார் கண்மாய் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன பரப்பை கொண்டுள்ளது. ஆதியூர் கண்மாய், மருங்கூர் கண்மாய் உபரி நீர் ஆதாரமாக கொண்டு வரத்து நீர் பெறுகிறது. தற்போது பாசனப்பகுதி முழுவதும் 10 முதல் 20 நாளான நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போதைய தொடர் மழையால் கண்மாய் நிரம்பி உள்ளது. இதை வைத்து இந்த ஆண்டு பயிர்களை தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து சமாளிக்கலாம் என நம்பிய நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள், பாசன விவசாயிகள் அனுமதி இன்றி கண்மாய் மடை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி கொண்டிருந்தது. தண்ணீர் வெளியேறி வருவது கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். நேரில் பார்வையிட்ட அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்தியதுடன் மடையை அடைக்க உத்தரவிட்டனர். பாசன விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்க்கு முறையான நீர் ஆதாரம் இல்லா நிலையில் திடீர் மழையால் கண்மாய் நிரம்பியதும் தண்ணீரை திறந்து வெளியேற்றுகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் சிலர் மடையை திறந்து விட்டு தண்ணீர் வெளியேற்றினர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதேபோல் தற்போதும் அனுமதி இன்றி திறக்கப்பட்டது. மீன் பாசி ஏலம் விட்டால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் நிலையில் பாசனத்திற்காக வைத்துள்ள நீர் அனுமதி இன்றி திறக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்