உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்

திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டி ஓராண்டிற்கு மேல் ஆகி கட்டடம் திறப்பு விழா காணாத நிலையில், இருக்கின்ற கட்டடங்கள் பல கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், பல உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து வசதிகளும் கூடிய பல மாளிகை கொண்ட கட்டடம் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் முடிந்து ஓராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த அரசு மருத்துவமனைக்கு உள்ளூர் , வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் கூடுதல் வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பல அறைகளில் கூரைகள் உட்புறம் வெளிப்புறம் பெயர்ந்து உதிர்ந்து கிடக்கிறது. நாளுக்கு நாள் கட்டடம் சேதம் அடைந்து வரும் நிலையில் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையின் புதிய கட்டடங்களை திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ