உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகரமைப்பு பிரிவில்  தொடரும் காலி பணியிடங்கள் வரைபட அனுமதி மீறி கட்டடங்கள் கட்டுவது அதிகரிப்பு

நகரமைப்பு பிரிவில்  தொடரும் காலி பணியிடங்கள் வரைபட அனுமதி மீறி கட்டடங்கள் கட்டுவது அதிகரிப்பு

விருதுநகர்: தமிழகத்தில் பணி வரன்முறைக்கு பின்னும் நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவின் பல பணிநிலைகளில் காலி பணியிடம் தொடர்கிறது. இதனால் வரைபட அனுமதி மீறி கட்டடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் உள்ள சிறப்பு நிலை, முதல், இரண்டாம், தேர்வு நிலை நகராட்சிகளில் 2023ல் பணி வரன்முறை நடந்தது. அப்போது சுகாதாரப்பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவுகளில் அலுவலர்கள் ஆய்வாளர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டது. ஏற்கனவே நகராட்சிகளில் அடிப்படை வசதி, வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கும் சூழலில் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நகரமைப்பு பிரிவில் அலுவலர் பணியிடங்கள் பல நகராட்சிகளில் காலியாக உள்ளது. ஆய்வாளர்களே பார்க்கின்றனர். சில நகராட்சிகளில் அலுவலர் பணியிடம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் புதிதாக நடக்கும் கட்டுமான பணிகளில் வரை படம் வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது. குறைந்த அலுவலர்கள் இருப்பதால் கள ஆய்வு பணிகளும் சுணக்கமாகிறது.வேறு வழியின்றி வரைபட அனுமதி வழங்கப்பட்டாலும் அனுமதி மீறி அதிகளவிலான மாடி கட்டடங்கள் கட்டுவது, அளவை மீறி கட்டடங்களை நத்தம் புறம்போக்கு, பாதை வரை ஆக்கிரமித்து கட்டுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு கள ஆய்வு செய்ய நகரமைப்பு பிரிவில் தொடரும் பற்றாக்குறையும் காரணமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை