மேலும் செய்திகள்
மகா சமாதி தினம்
03-Oct-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடந்தது. பழைய பாளையம் ராஜூக்கள் சாவடி தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். சிங்கராஜா கோட்டை தலைவர் ராம்சிங் ராஜா முன்னிலை வகித்தார். பூர்ணகலா, புஷ்கலா சமேத அய்யனார் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து நீர் வளத்தை மேம்படுத்தவும், விவசாயத்திற்கு மழையை கொண்டு வரவும் வேண்டி கோயில் வளாகத்தில் மழையின் கடவுளான வருண பகவானை போற்றி மந்திரங்கள் கூறினர். வேத விற்பன்னர்கள் மூலம் யாகம் வளர்த்து வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. விவசாய சங்கத்தினர், நகர் பிரமுகர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
03-Oct-2025