உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வி.சி.க., ரயில் மறியல்: 34 பேர் கைது

வி.சி.க., ரயில் மறியல்: 34 பேர் கைது

விருதுநகர் : அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுநகரில்ரயில் மறியல் போராட்டம் நடந்தது.இதில் மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். ரயில்வே ஸ்டேஷன் வாயில் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் மறுக்கப்பட்டது. இந்நிலையில் நுழைவுப்பகுதியிலே மறியல் செய்ய முற்றுகையிட்டனர். போலீசார் 34 பேரை கைது செய்தனர். டி.எஸ்.பி., யோகேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் அதன் மாநில நிர்வாகி விடியல் வீரப்பெருமாள் தலைமையில் உள்துறை அமைச்சரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. 14 பேர் கைது செய்யப்பட்டனர்.*ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் கவுதமன் பேசினார்.*ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூ., நகர செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னு பாண்டியன் பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் புனிதன், நகர செயலாளர் மிக்கேல்ராஜ், தொகுதி செயலாளர் தர்மர், மாணவரணி அமைப்பாளர் எழில் வளவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.*திருச்சுழி அருகே பரளச்சி மேலையூர் பஸ் ஸ்டாப் அருகில் இந்திய கம்யூ., சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் செல்வம், நகரச் செயலாளர் செந்தூர் பாண்டி, நிர்வாக குழு உறுப்பினர் நீதி ராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அருண் சிங் உட்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.*திருத்தங்கலில் மாநகர செயலாளர் செல்வின் யேசுதாஸ் தலைமையில் வி.சி., யினர் திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷனிற்கு காலை 8:10 க்கு வந்த மதுரை - செங்கோட்டை ரயில் முன் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.மாநகர தி.மு.க., சார்பில் சிவகாசி அம்பேத்கர் சிலை முன்பு மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஓவிய விஜய்
டிச 21, 2024 08:49

என்னது வெறும் ஆர்பாட்டம் மட்டும்தானா...? திருப்பி அடி, திமிறி எழு அதெல்லாம் சும்மா ஜூஜூபி யா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை