மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
14 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
14 hour(s) ago
ராஜபாளையம் : செங்கோட்டை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடந்தது. சம்பவ இடத்தை சுனில்குமார் ஐ.ஜி., நேற்று பார்வையிட்டார். திருநெல்வேலி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த சோலைசேரியில் செப்.13ல் தண்டவாளத்தில் சிமென்ட் சிலிப்பர் கட்டை வைக்கப்பட்டு இருந்தது. இதில் செங்கோட்டை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் மோதியது. இன்ஜினின் முன்பக்கம் சேதமடைந்து, அருகே சங்கரன்கோவில் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. இது குறித்து ரயில்வே மற்றும் தமிழக போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை யாரும் கைதாகவில்லை. சம்பவம் நடந்த இடத்தை நேற்று மாலை 4 மணிக்கு சுனில்குமார் ஐ.ஜி.,(ரயில்வே) பார்வையிட்டார். தமிழ் சந்திரன் எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் விநாயகம் டி.எஸ்.பி.,க்கள், விருதுநகர் ரயில்வே இன்ஸ்பெக்டர் ராவணன் சம்பவம் குறித்து விளக்கினர்.
14 hour(s) ago
14 hour(s) ago