| ADDED : செப் 15, 2011 09:19 PM
ராஜபாளையம் : ''பஸ்களின் மீது கல் வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ,ராஜேஷ் தாஸ் ஐ.ஜி., கூறினார். ராஜபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பு சம்பவத்தையடுத்து, ராஜேஷ்தாஸ் ஐ.ஜி., சஞ்சய் மாத்தூர் டி.ஐ.ஜி., நஜ்மல் கோதா எஸ்.பி., முகாமிட்டனர். கல்வீச்சை தடுப்பது , தப்பிப்பது, கலவர காலத்தில் வாகனங்களில் வேகமாக ஏறி சம்பவ இடம் செல்வது குறித்து செயல்விளக்கம் நடந்தது. போலீஸ் அதிகாரிகள் உள்பட 240 பேர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து ஐ.ஜி., கூறுகையில், '' சிலை அவமதிப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம். இங்குள்ள 17 சிலைகளுக்கு தலா இரு போலீசார் கண்காணிப்பில் உள்ளனர். பஸ் மீது கல்வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் , '' என்றார். விருதுநகர் எஸ்.பி.,நஜ்மல் கோதா கூறுகையில், '' சிலை அவமதிப்பு தொடர்பாக நடந்த சம்பவங்களில், இதுவரை ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக,'' கூறினார்.