உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வத்திராயிருப்பு : ''முன்மாதிரி வார்டாக மாற்றுவேன்,'' என , எஸ். கொடிக்குளம் பேரூராட்சி 7வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் இ. சுப்புலட்சுமி கூறினார். வத்திராயிருப்பு அருகே எஸ். கொடிக்குளம் பேரூராட்சி 7வது வார்டு(கூமாப்பட்டி) அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் இ. சுப்புலட்சுமி கட்சியினருடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் கூறிகயதாவது: கடந்த 10 வருடமாக மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால்தான், தொடர்ந்து இருமுறை மக்கள் என்னை கவுன்சிலராக தேர்ந்தெடுத்தனர். மீண்டும் மக்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். இம்முறை எனது வார்டை ஊருக்கே ஒரு 'முன்மாதிரி' வார்டாக மாற்றுவதே எனது முதல்வேலை. ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு குடிநீர் பொதுக்குழாய், மினிடேங்க் வசதி , இரு இடங்களில் நவீன வசதிகளுடன் பெண்கள் கழிப்பறை செய்து தருவேன். அனைத்து தெரு வாறுகால்களும் புதுப்பிக்கப்பட்டு ,கழிவுநீர் தங்குதடையின்றி செல்லவும், சுகாதாரமான நிலை ஏற்படவும் வழிவகுப்பேன். அமைச்சர், மற்றும் மாவட்ட செயலாளர் உதவியுடன் , அரசு நலத்திட்ட உதவிகளும் வார்டு மக்களுக்கு கிடைக்கச் செய்வேன். மக்கள் எந்த நேரமும் என்னை அணுகி குறைகளை தெரிவிக்கலாம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ