உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றுவேன் : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

சாத்தூர் : '' பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றுவேன்,'' என ,ரெட்டிபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ். கே.எஸ். ராஜேந்திரன் கூறினார். சாத்தூர் ஒன்றியம் பெத்துரெட்டிபட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் இவர், நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.தற்போதைய தலைவரான இவர், சிறப்பாக பணியாற்றியதற்காக , மத்திய, மாநில விருதுகள் பெற்றுள்ளார்.

ஸ்.கே.எஸ். ராஜேந்திரன் கூறியதாவது: இரண்டாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். பெத்து ரெட்டிபட்டி கிராமத்திற்கு மினரல் வாட்டர் பிளாண்ட் கொண்டு வந்துள்ளேன். தினமும் ஊராட்சி மூலம் நபர் ஒருவருக்கு 120 லி., அளவு பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்கப்படுகிறது. பல விருது வாங்கி ஊராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளேன். அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க செய்வேன். சின்னத்தம்பியாபுரம், வடமலாபுரம் கிராமத்திற்கும் மினரல்வாட்டர் பிளாண்ட் அமைக்கப்படும். அனைத்து கிராமத்திற்கும் சுகாதார வளாகங்கள் செயல்படுத்தப்படும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். வடமலாபுரம் கிராமத்திற்கு புதிய சமுதாயக்கூடம் கட்டி தரப்படும்.ஊராட்சி வருவாயை பெருக்க ஊராட்சி பகுதியில் சிறு,குறு தொழில்களை தொடங்க முயற்சி மேற்கொள்வேன்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை