உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் 95.14 சதவீதம்! பிளஸ் 2வை தொடர்ந்து இதிலும் 6வது இடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் 95.14 சதவீதம்! பிளஸ் 2வை தொடர்ந்து இதிலும் 6வது இடம்

விருதுநகர் மாவட்டத்தில் 2024 ஏப்ரலில் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மாவட்டத்தில் உள்ள 357 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 114 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 11 ஆயிரத்து 792 மாணவர்கள், 12 ஆயிரத்து 523 மாணவிகள் என 24 ஆயிரத்து 315 மாணவர்கள்என தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 988 மாணவர்கள், 12 ஆயிரத்து 146 மாணவிகள் என 23 ஆயிரத்து 134 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் 2022 கல்வியாண்டில் 95.96 சதவீதம் தேர்ச்சி பெற்று 3ம் இடம் பிடித்துஇருந்தது. 2023ல் 96.22 சதவீதம் தேர்ச்சி அடைந்து அதே இடத்தை தக்க வைத்திருந்தது. தற்போது 1.08 சதவீதம் குறைந்து மாநில அளவில் 6வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுஉள்ளது.அரசுப்பள்ளிகள் 57, சமூக நலப்பள்ளிகள் 3, உதவி பெறும் பள்ளிகள் 28, தனியார் பள்ளிகள் 52 என மொத்தமாக 140 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. ஆங்கில பாடத்தில் 6 மாணவர்கள், கணிதத்தில் 687 மாணவர்கள், அறிவியலில் 101, சமூக அறிவியலில் 82 என மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர்.மாவட்ட அளவில் என்.கேசவப்பிரியா 498 மதிப்பெண்களும், வி.ஜனஆனந்த், எஸ்.சகானா பார்வதி ஆகியோர் 497 மதிப்பெண்களும், எம்.யஷ்வந்தமன், ஜெயசூர்யா கார்த்திகேயன், என் . திவாகரன், எ.நந்தினி, இ.செல்வராணி, சி.வி.ரவீந்திரகுமார், எம்.ஷாரு ப்ரீத்தி ஆகியோர் 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.3வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தேர்ச்சி சதவீதம் பின்தங்கியது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: மாவட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளிகளில் இடைநின்ற பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் தேர்ச்சி அடையாததால் இந்த ஆண்டு மாநில முதலிட வாய்ப்புகள் குறைந்து விட்டது. முதலிட தரங்களை விட பல மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்பதால் அவ்வாறே முடிவு செய்யப்பட்டது. இந்தாண்டு இடைநின்ற மாணவர்களை துவக்கத்தில்இருந்து கண்டறிந்து முழுமையான பயிற்சி வழங்கி தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்