உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு நிலங்கள் அபகரிப்பு : நடவடிக்கை எடுக்க தயக்கம்

அரசு நிலங்கள் அபகரிப்பு : நடவடிக்கை எடுக்க தயக்கம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மீதுநடவடிக்கை எடுக்க நகராட்சி மற்றும் வருவாய் துறை தயங்குகிறது. நிலமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசு அதிக கவனம் செலுத்தி, போலீஸ் தனி பிரிவும் துவக்கி உள்ளது. அருப்புக்கோட்டையில் நகராட்சி மற்றும் வருவாய்துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலங்கள், மலையரசன் கோயில் ரோடு பகுதி, தெற்கு தெரு, பெரிய கண்மாய் , திருச்சுழி ரோடு, சொக்கலிங்கபுரம் மயானச்சாலை, பந்தல்குடி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, பாலையம்பட்டி பகுதிகளில் உள்ளன. இதை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்து பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர்.இதை மீட்க நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போல் பூங்காக்கள் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி இடங்களும், திருச்சுழி ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களும் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளன.இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி தான் அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி