உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளையாட்டு போட்டிகளில் ஆள் மாறாட்டத்தால் சிக்கல்

விளையாட்டு போட்டிகளில் ஆள் மாறாட்டத்தால் சிக்கல்

விருதுநகர் : பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில், ஆள் மாறாட்டம் செய்வதால், விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பள்ளிகளுக்கிடையே குறு வட்டம், கல்வி மாவட்டம், மண்டலம், மாநில அளவில் குழு மற்றும் தனி நபர் திறன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் கலந்து கொள்ளும் பள்ளி, மாணவர், பெயர் விபரங்கள் இருக்கும். விளையாடும் இடத்தில் வேறு நபரை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செய்கின்றனர். ஆள் மாறாட்டம் செய்தவரின் அங்க அடையாளங்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவதால், ஆள் மாறாட்டம் யாருக்கும் தெரிவதில்லை. விளையாட்டு வீரர்களின் உடல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சந்தேகப்பட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு பல போட்டிகளில் ஆள் மாறாட்டம் செய்வதால், உண்மையில் போட்டியிடும் வீரர்கள் சாதனை படைக்க முடியாமல் போய்விடுகிறது. இதை தவிர்க்க, விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் பள்ளி மாணவர்களின் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையை பள்ளி தலைமையாசிரியரே வழங்க வேண்டும். குழு விளையாட்டு போட்டிகளில் குழுக்களில் தனித்தனியாக அடையாள அட்டைகள் பெறப்பட வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். இல்லை என்றால் ஆள் மாறாட்டத்தை தவிர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ