உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மெழுகுவர்த்தி ஏந்தி அன்னா ஹசாரேக்கு ஆதரவு

மெழுகுவர்த்தி ஏந்தி அன்னா ஹசாரேக்கு ஆதரவு

சிவகாசி : சிவகாசியில் பல்வேறு பொது நல அமைப்புகள், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள் சார்பில் அன்னாஹசாரேயின் உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்து, வலுவான ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற கோரி பஸ் ஸ்டாண்ட் முன்பு கையெழுத்து இயக்கம் நடத்தினர். சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் தர்கார் தலைமை வகித்தார். செயலாளர் மார்ஷல் ஸ்டாலின், இளம் தொழில் முனைவேர் பயிற்சி பள்ளி பொருளாளர் இளங்கோ மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். பலரும் ஆர்வமாக வந்து ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என கையெழுத்திட்டு மெழுகு வர்த்தி ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தினர். இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பெண்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை