| ADDED : செப் 08, 2011 10:39 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் ,மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியில் நகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. 800 பேர் படிக்கின்றனர். போதுமான வகுப்பறைகள் இல்லை. மாணவர்களை வெளியில் உட்கார வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். வெயில், மழையால் அவதிப்படுகின்றனர். மழை காலத்தில் பள்ளி வராண்டா வில் உட்கார வைக்கின்றனர். போர்டில் எழுத வேண்டுமானால், ஏதாவது ஒரு வகுப்பறை சென்று, அந்த மாணவர்களை வெளியேற்றி எழுதுகின்றனர். நெசவாளர் காலனி இடத்தில் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக ரூ. 58 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால், கட்டடம் கட்ட நடவடிக்கை இல்லை. இதனால் அந்த நிதியும் திரும்பியது. மாணவர்கள் நலன் கருதி, வகுப்பறைகள் கட்ட, கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.