உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பூச்சி மருந்தை தின்ற 12 மயில்கள் பலி மயில்களை சாப்பிட்ட நாய்களும் பலி

பூச்சி மருந்தை தின்ற 12 மயில்கள் பலி மயில்களை சாப்பிட்ட நாய்களும் பலி

தளவாய்புரம் : விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே வாழவந்தாள்புரத்தில் பூச்சி மருந்தை தின்ற 12 மயில்கள் பலியாகின. இறந்த மயில்களை சாப்பிட்ட நாய்களும் பலியாகின. இது பற்றி விவசாயியிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழவந்தாள்புரத்தை சேர்ந்த செல்லத்துரை, காவுக்கனி ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் 12 மயில்கள் செத்துக் கிடந்தன. இந்த மயில்களை சாப்பிட்ட இரண்டு நாய்களும் இறந்தன. இதில் மூன்று மயில்கள் காவுக்கனி என்பவரது கிணற்றில் கிடந்தது. வனச்சரகர் ரவீந்திரன் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், புளுகாண்டி என்பவர் வயலில் கேப்பை நாற்று பாவியுள்ளார். இதை பாதுகாக்க, அவர் வைத்த பூச்சி மருந்தை தின்ற மயில்கள் பலியாகியிருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் புளுகாண்டியிடம் விசாரிக்கின்றனர். மயில்கள் இறப்பு குறித்து கால்நடை உதவி இயக்குனர் செல்லச்சாமி, கால்நடை மருத்துவர் பாண்டி, வன உயிரின பாதுகாப்பு அலுவலர் பார்த்திபன் ஆய்வு செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மயில்களை விஷம் வைத்து அழிப்பது தொடர்ந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ