| ADDED : செப் 07, 2011 11:01 PM
விருதுநகர் : மத்திய அரசின் சொர்ணஜெயந்தி கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம், 2012 ஜன. முதல் மாநில கிராம வாழ்வாதார இயக்கம் என செயல்படுத்தப்படுகிறது.மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும், சொர்ணஜெயந்தி கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் கிராமங்களில் சுய தொழிலில் பயிற்சி வழங்கப்பட்டு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனிடையே, இத்திட்டம் 2012 ஜன. முதல் மாநில கிராம வாழ்வாதார இயக்கம் என பெயர் மாற்றப்பட்டு செயல்பட உள்ளது. கிராமத்தினர் சொந்தமாக தொழில் வாய்ப்புகளை பெருக்கிட ,இத்திட்டத்தில் வழி வகை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.