விருதுநகர் : உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களை, அவர்கள் பணிபுரியும் இடம், சொந்த ஊர்களை தவிர்த்து, வேறு பகுதியில் தேர்தல் பணியாற்ற செய்ய வேண்டும், என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கமிஷனரே தேர்தல் அலுவலராகவும், கண்காணிப்பாளர் உதவி அலுவலராகவும், பேரூராட்சி பகுதியில் தேர்தல் அலுவலராக செயல் அலுவலர் , ஒன்றிய அளவில் ஆறு ஊராட்சிகளுக்கு ஒரு பி.டி.ஓ .,தேர்தல் அலுவலராக செயல்பட உள்ளனர். 50 ஆயிரம் ஓட்டுகள் கொண்ட எட்டு மாவட்ட பஞ்., கவுன்சிலருக்கு இணை இயக்குனர் அளவில் தேர்தல் அலுவலரும், உதவி இயக்குனர் அளவில் உதவி தேர்தல் அலுவலரும், எட்டு ஒன்றிய கவுன்சிலருக்கு பி.டி.ஓ., அளவில் ஒரு தேர்தல் அலுவலரும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் உள்ளவர் தேர்தல் அலுவலராக செயல்பட உள்ளனர்.இது போல், தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில்,தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை, அவர்கள் பணிபுரியும் பகுதி, சொந்த ஊர்களை தவிர்த்து, வேறு பகுதியில் தேர்தல் பணியாற்ற செய்யவும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.