உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ் மீது கல் வீச்சு

அரசு பஸ் மீது கல் வீச்சு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் அருகே நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு, திருநெல்வேலியிலிருந்து வந்த பஸ் மீது, யாரோ கல் எறிந்ததில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. பயணிகள் கார்த்திகேயன், அழகம்மாள், வடிவு காயமடைந்தனர். அருப்புக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். டவுன் போலீசார், ராமசாமிபுரத்தை சேர்ந்த வேலுச்சாமியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். தகவல் அறிந்த கிராம மக்கள், நேற்று காலை 9 மணிக்கு ராமசாமிபுரம் மெயின் ரோட்டில் ரோடு மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்த டி.எஸ்.பி., முருகேசன், டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் பொதுமக்களை சமாதானம் செய்து, 'விசாரணை செய்த பின் வேலுச்சாமியை விட்டு விடுவோம்,' என, கூறியதன்படி கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ