உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அருப்புக்கோட்டை நகராட்சியில் பெண் வாக்காளர்களே அதிகம்

அருப்புக்கோட்டை நகராட்சியில் பெண் வாக்காளர்களே அதிகம்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சியில், ஆண் வாக்காளர்கள் 30 ஆயிரத்து 231, பெண் வாக்காளர்கள் 31 ஆயிரத்து 546, என, 61 ஆயிரத்து 771 பேர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். நகராட்சி 36 வார்டுகளுக்கும் 71 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க., கைவசம் உள்ள நகராட்சியில், இம் முறை அ.தி.மு.க., சார்பாக தர்மராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவிப்பால், கட்சியினர் தேர்தல் பணிகளை துவக்கி உள்ளனர். நகராட்சி தி.மு.க., தலைவரான சிவபிரகாசம், இங்கு போட்டியிட கட்சியில் விருப்ப மனுவும் கொடுத்துள்ளார். இதனால் இவரே மீண்டும் போட்டியிடலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ